தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கலாச்சாரத்தை மேம்படுத்த 6,000 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள்”- அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தகவல் - நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சு

பாரத கலாச்சாரத்தை பாதுக்க பிரதமர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் என ஆதிச்சநல்லூர் அருங்காட்சியக அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசி உள்ளார்.

கலாச்சாரத்தை மேம்படுத்த 6,000 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள்
கலாச்சாரத்தை மேம்படுத்த 6,000 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள்

By

Published : Aug 5, 2023, 4:36 PM IST

Updated : Aug 5, 2023, 7:41 PM IST

கலாச்சாரத்தை மேம்படுத்த 6,000 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள்

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியக அடிக்கல் நாட்டு விழா இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது. இந்த நிகழ்வில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்ட சைட் மியூசியத்தையும் துவக்கி வைத்து அகழாய்வில் கிடைத்த பொருட்களை பார்வையிட்டார்

பின்னர், விழாவில் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியதாவது, “ உலகத்திலேயே மிக பழமையான பகுதிகளில் தொடர்ந்து வாழ்ந்து வருபவர்களின் கலாச்சாரத்தை அகழாய்வு மூலம் வெளிக்கொண்டு வருகிறோம். 3,4 காலகட்டங்களாக ஆராய்ச்சி நடைபெற்று உள்ளது. இதில் இங்கிருந்து பல நாடுகளுக்கு வணிகம் நடைபெற்று உள்ளது தெரியவந்துள்ளது.

மனிதர்களை புதைத்த இடங்களும் இங்கு உள்ளது. அதில் அவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது. ஈம சடங்குகள் செய்யப்பட்ட இடம் இதுவாகும். அவர்கள் வாழ்ந்த இடங்களும் இங்கு உள்ளது. 3,500 ஆண்டுகளுக்கு முன்னதாக நெல்லும், திணையும் உபயோகப்படுத்திய பொருட்களை நமது தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

நாடு முழுவதும் 5 இடங்களை மத்திய பட்ஜெட்டில் அறிவித்தோம். அதில், அலெக்சாண்டர் ரியா காலத்தில் இருந்து தற்போது வரை அகழாய்வு மேற்கொண்ட பொருட்களை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை இங்கு காட்சிப்படுத்தி தற்போதைய மக்கள் அதனை அறிந்து கொள்ளும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

அலெக்சாண்டர் ரீயா காலத்தில் அகழாய்வு மேற்கொண்ட பொருட்களை பெர்லின் வெளிநாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அதனையும் இந்தியாவிற்கு கொண்டுவந்து ஆதிச்சநல்லூரில் காட்சிப்படுத்தப்படும். ராமாயண இணைப்பு சுற்றுலாவை அசோக வனம் வரை கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக இலங்கையுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆதிச்சநல்லூரில் உலகத் தரத்தில் அருங்காட்சியகம்: அடிக்கல் நாட்டிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கலாச்சாரத்தை மேம்படுத்த 6,000 கோடி மதிப்பீட்டில் 77 புதிய திட்டங்களை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் என 30 இடங்களில் மத்திய அரசு செயல்படுத்துகிறது. நமது நாட்டின் கலாச்சாரத்தை சின்னமாக காட்டும் பொருட்களை கடத்தியும் அனுமதியுடனும் கொண்டு செல்லப்பட்ட 300 க்கும் மேற்பட்ட பொருட்களை மீட்டு கொண்டு வந்து உள்ளோம்.

ஆதிச்சநல்லூர் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்ற 5000 க்கும் மேற்பட்ட பொருட்களும் மீண்டும் அதே இடங்களுக்கு கொண்டு வரப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கலாச்சாரத்தை பாதுகாக்க ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் புதிய புதிய திட்டங்களை கொண்டுவர பிரதமர் பல ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

வெள்ளையர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் கிடைத்து விட்டது ஆனால் அவர்கள் பதித்து சென்ற விசயங்கள் நம் மனதில் அகலாமல் உள்ளது. 75 ஆண்டுகளாக நாட்டிற்காக போராடிய வீரர்களும் எந்த நினைவிடமும் இல்லாமல் இருந்ததை மாற்றி இந்தியா கேட் அருகே நினைவு சின்னம் பிரதமரால் அமைக்கப்பட்டது.

பல யுகங்களாக உள்ள பாரதத்தின் சரித்திரத்தை எடுத்து செல்லும் வகையில் உலகின் பெரிய அருங்காட்சியகம் டெல்லியில் அமைகிறது. 1.17 லட்சம் சதுர மீட்டரில் நாடாளுமன்றத்தின் வடக்கு தெற்கு கட்டிடத்தில் அமைகிறது. 950 அறைகள் கொண்டதாக அந்த அருங்காட்சியகம் அமைகிறது. நாட்டின் ஒவ்வொரு பிரதமர்களின் சரித்திரங்கள் இடம்பெறும் வகையில் டிஜிட்டல் வடிவிலான அருங்காட்சியகமும் அமைகிறது.

மலைவாழ் மக்களின் வாழ்வியல் மற்றும் அவர்களது வரலாறு குறித்த தகவல் அடங்கிய அருங்காட்சியகம் மலைவாழ் மக்கள் அதிகம் உள்ள குஜராத், சட்டீஸ்கர், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமைய உள்ளது. பனை ஓலைச்சுவடி மற்றும் செப்பு பட்டயங்களை, டிஜிட்டல் செய்யும் பணிகள் செய்யப்பட்டுள்ளது.

ஓலைச்சுவடிகள் 3 கோடி பக்கங்களாக கொண்டு டிஜிட்டல் முறையாக மாற்றப்பட்டுள்ளது. தமிழர்களின் நாகரிகங்கள் உள்ள பல்வேறு நாடுகளில் இருக்கும் பாரம்பரிய சின்னங்களை புனரமைக்க இந்திய தொல்லியல் துறை தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும். ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் ஆன்சைட் அருங்காட்சியகத்திற்கு எந்த தடையுமின்றி போதுமான நிதியை மத்திய அரசு தரும்” என்றார்.

இதையும் படிங்க:மும்முரமாக நடைபெற்று வரும் மகளிர் உரிமைத் தொகைக்கான பணிகள்.. 2ம் கட்ட விண்ணப்பதிவு இன்று முதல் தொடக்கம்..

Last Updated : Aug 5, 2023, 7:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details