தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உமறுப்புலவர் 376ஆவது கந்தூரி விழா - இஸ்லாமிய மக்கள் பங்கேற்பு! - Umarupulavar 376th Khanduri Festival

தூத்துக்குடி: எட்டயபுரத்தில் உள்ள அமுதகவி உமறுப்புலவர் நினைவு மண்டபத்தில், அவரின் 376ஆவது நினைவு நாளில் கந்தூரி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

கந்தூரி விழா

By

Published : Nov 12, 2019, 11:17 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் சீறாப்புராணம் இயற்றிய அமுதகவி உமறுப்புலவர் நினைவு மண்டபம் உள்ளது. இங்கு உமறுப்புலவரின் 376வது நினைவு நாளையொட்டி, கந்தூரி விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வை மேலப்பாளையம் கல்வத்கலீபா நாயகம் ஹாஜி, செய்யது அப்துல் காதிர் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.

உமறுப்புலவர் 376ஆவது கந்தூரி விழா

இந்த விழாவில், சந்தனக் குடம் எடுத்து வரப்பட்டு உமறுப்புலவரின் சமாதியில் சந்தனம் பூசியும், புளியங்குடி கமால் மைதீன் சீறாப்புராண காவிய பாடல்களை பாடியும் கொண்டாடினர். இதில், அதிகமான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதையும் படிங்க: விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல இனி டோக்கன் வசதி!

ABOUT THE AUTHOR

...view details