தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் உதயநிதி... தொண்டர்களிடையே தள்ளு முள்ளு...பொருட்கள் சேதம் - தூத்துக்குடி வந்த உதயநிதி

இளைஞரணி நிகழ்ச்சிக்காக திமுக மாநில இளைஞரணிச்செயலாளர் உதயநிதி தூத்துக்குடி வந்தபோது பாதுகாப்பு குறைபாட்டால் விமான நிலையத்தில் கூடியிருந்த திமுக தொண்டர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Etv Bharatதூத்துக்குடி வந்த உதயநிதி - திமுக தொண்டர்களிடையே தள்ளு முள்ளு
Etv Bharatதூத்துக்குடி வந்த உதயநிதி - திமுக தொண்டர்களிடையே தள்ளு முள்ளு

By

Published : Nov 20, 2022, 6:31 PM IST

தூத்துக்குடி:திமுக மாநில இளைஞரணிச்செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமானநிலையம் வந்தடைந்தார்.

அவரை வரவேற்க ஏராளமான இளைஞர்கள் புடைசூழ மேள, தாளங்கள் முழங்க ஒன்று கூடி ஆட்டம் ஆடினர். மேலும், அப்போது காவல் துறை குறைபாட்டால் தொண்டர்களிடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும், விமான நிலையத்தில் அலங்காரத்திற்கு வைக்கப்பட்ட கருங்கல்லினால் ஆன 4 அடி கல் சிலை, பூந்தொட்டிகள், பதாகைகள் ஆகியவை உடைந்தன. இதனால் விமானத்தில் வந்த பயணிகள் இதனைப்பார்த்து முகம் சுளித்து கொண்டு கடந்து சென்றனர்.

தூத்துக்குடியில் உதயநிதி... தொண்டர்களிடையே தள்ளு முள்ளு...பொருட்கள் சேதம்

இதையும் படிங்க:ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறங்கள்... மக்கள் சொல்லும் புதிய காரணம்?

ABOUT THE AUTHOR

...view details