தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கைக்கு கடத்த இருந்த 2500 கிலோ பீடி இலைகள் பறிமுதல்... - வெள்ளைப்பட்டி கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார்

தூத்துக்குடி அருகில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 2500 கிலோ பீடி இலைகளைப் பறிமுதல் செய்து தப்பியோடிய நபர்களைப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு கடத்த இருந்த 2500 கிலோ பீடி இலைகள் பறிமுதல்...
இலங்கைக்கு கடத்த இருந்த 2500 கிலோ பீடி இலைகள் பறிமுதல்...

By

Published : Aug 17, 2022, 7:10 PM IST

தூத்துக்குடிஅடுத்து வெள்ளைப்பட்டி கடற்கரைப்பகுதியில் கடலோரப்பாதுகாப்புக்குழும போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், முதல் நிலைக் காவலர்கள் பகவதி பாபு, ஊர்க்காவல் படை காவலர்கள் கிறிஸ்துராஜா, நிக்க்ஷன் ஆகியயோர் வெள்ளைப்பட்டி கடற்கரையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்பொழுது கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கடலில் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலையில் இருந்த படகை மடக்கிப் பிடிக்க முற்படும்போது போது போலீசாரை கண்டதும் படகில் இருந்த நபர்கள் தப்பிப்பதற்காக வெள்ளை நிற மூட்டைகளை கடலில் வீசிவிட்டு தலைமறைவாகி தப்பி ஓடிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, உடனடியாக கடலில் மிதந்த வெள்ளை நிறமூட்டைகளைக் கைப்பற்றி சோதனை மேற்கொண்டதில் 28-பண்டல்களில் 2,500 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் இருப்பதைக் கண்டனர். தொடர்ந்து அவற்றைப்பறிமுதல் செய்து கடலோர குழும காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

பின்பு இந்தக்கடத்தல் சம்பவம் குறித்து கடலோர காவல் துறை ஆய்வளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை...

ABOUT THE AUTHOR

...view details