தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
மேலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 429 பேர் தற்போது கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வந்த ஆண்கள் இருவர் நேற்று உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது.