தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூட்டை உடைத்து 9 சவரன் நகை கொள்ளை: இரு கொள்ளையர்கள் கைது - Thoothukudi District News

தூத்துக்குடி: வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகை உள்ளிட்ட பொருள்களை கொள்ளையடித்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

By

Published : May 29, 2021, 5:27 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கால்டுவெல் காலனியைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன் (46) என்பவர் கடந்த 30ஆம் தேதி வெளியூர் சென்றுள்ளார். அவர் வீடு திரும்பிபோது, வீட்டின் முன் வாசல் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து.

அதிர்ச்சியைடந்து அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 9 சவரன் வளையல்கள், ஒரு லேப்டாப், வெள்ளி குங்குமச்சிமிழ், செல்போன், ரொக்கம் ரூ.3,000 திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சந்தானகிருஷ்ணன் காவல்துறையில் புகாரின் அளித்தன் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததோடு, சம்பவ இடத்தில் உள்ள கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்தனர். பின் தூத்துக்குடி மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கிய செல்வ சதீஷ் (எ) சூப்பி (20), முனியசாமிபுரத்தைச் சேர்ந்த டேனியல்ராஜ் (34) ஆகியோர் தான் வீட்டை உடைத்து நகை, பணம், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கைப்பற்றினர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட செல்வ சதீஷ் (எ) சூப்பி மீது பைக் திருட்டு உள்பட 8 திருட்டு வழக்குகளும், டேனியல்ராஜ் என்பவர் மீது கஞ்சா விற்பனை, திருட்டு வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சமூக வலைதளத்தில் பதிவிடும் பாலியல் புகார்களை சைபர் கிரைம் கண்காணிக்கிறது - ஆணையர் சங்கர் ஜிவால்

ABOUT THE AUTHOR

...view details