தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி: கரோனா வார்டிலிருந்து இருவர் தப்பியோட்டம்! - two patients escape from corona ward

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வார்டிலிருந்து கரோனா பாதிப்பாளர்கள் இருவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Thoothukudi government hospital
Thoothukudi government hospital

By

Published : Aug 12, 2020, 6:50 AM IST

தூத்துக்குடி மாவட்டம் சிவத்தையாபுரம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த இருவர் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனை தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

சில நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த இவர்கள் நேற்று(ஆக.11) கரோனா வார்டிலிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இது குறித்து சுகாதார அலுவலர்கள் காவலர்களிடம் தெரிவித்தனர். அதன் பேரில் தப்பியோடிய கரோனா பாதிப்பாளர்களை காவலர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

கரோனா நோயாளிகள் தப்பிச் சென்றுள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் விவரம் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details