தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு 22 ஊழியர்களுடன் இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி ஏற்றிய கப்பல் ஒன்று வந்தது.
துறைமுகத்தின் சரக்கு இறக்கும் தளம் மூன்றில் கப்பலிலில் இருந்து நிலக்கரி இறக்கப்பட்ட நிலையில், கப்பலில் வந்த மூன்றாம் நிலை ஊழியர் ஒருவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கசிந்தது.
இதைத் தொடர்ந்து நிலக்கரி இறக்கும் பணி நிறுத்தப்பட்டது. துறைமுக சுகாதாரத் துறையினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம், சளி மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, உடன் பயணித்த பிற ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். கப்பலும் துறைமுகத்திற்கு வெளியே கொண்டுச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஊழியர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: வீரமரணமடைந்த தெலங்கானா வீரருக்கு இறுதிச்சடங்கு!