தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி அருகே பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதியதில் இருவர் பலி! - death in madurai national highway

தூத்துக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருக்கன்குடி கோயிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.

இருக்கன்குடி பாதயாத்திரை பக்தர்கள் மீது மோதிய கார்.. இருவர் உயிரிழப்பு!
இருக்கன்குடி பாதயாத்திரை பக்தர்கள் மீது மோதிய கார்.. இருவர் உயிரிழப்பு!

By

Published : Dec 28, 2022, 10:20 AM IST

Updated : Dec 28, 2022, 12:53 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே காயல்பட்டினம் லட்சுமிபுரம், கிராமத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாகச் சென்றுள்ளனர். அதேநேரம் கோயம்புத்தூரைச் சேர்ந்த விஜய்ராஜேஷ், நாசரேத்தில் இருந்து கோவைக்கு காரில் வந்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது குறுக்குச்சாலை அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, நிலைதடுமாறிய கார் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதி உள்ளது. இதில் சுடலைமுத்து (23) மற்றும் கண்ணன் (17) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் கார் மோதியதில் படுகாயமடைந்த அர்ஜுன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே காரை நிறுத்தாமல் சென்றதைப் பார்த்த உடன் வந்தவர்கள் கூச்சலிட்ட நிலையில், அங்குள்ள ஐயப்ப பக்தர்கள் காரை வழிமறித்துள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் காரின் கண்ணாடியைக் கற்களால் உடைத்துள்ளனர். இதனையடுத்து கார் ஓட்டுநர் விஜய் ராஜேஷை கைது செய்த எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சபரிமலை பக்தர்கள் வாகனம் விபத்து.. கேரளாவில் தமிழர்கள் 8 பேர் உயிரிழப்பு..

Last Updated : Dec 28, 2022, 12:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details