தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது - இருவர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

arrest
கைது

By

Published : Jan 30, 2021, 10:41 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் மறவன்மடம் தம்பிக்கை மீண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் (45), தாளமுத்துநகர் பெரிய மாதா கோயில் தெருவைச் சேர்ந்த அந்தோணிராஜ் (24), டேனியல்ராஜ், சாண்டல் (எ) சந்தனராஜ் ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகளின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் அந்தோணிராஜ், ஜெயமுருகன் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜுக்குப் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் அந்தோணிராஜ், ஜெயமுருகனையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய ஒப்புதல் அளித்தார். அதன்பேரில் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்த காவல் துறையினர் பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க:நெல்லையில் சட்டவிரோதமாக மது விற்ற 129 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details