தூத்துக்குடி மாவட்டம், சென்னல்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த ரமேஷ், சண்முகசுந்தர் ஆகிய இரண்டு பேர் மீதும் முறப்பநாடு காவல் நிலையத்தில் கொலைமுயற்சி பிரிவின் கீழ் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

இந்நிலையில், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரமேஷ், சண்முகசுந்தர் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய அனுமதிகோரிமாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பினார்.
அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய அனுமதி வழங்கியதன் பேரில் ரமேஷ், சண்முகசுந்தரை முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தார்.