தூத்துக்குடி: சட்டவிரோத விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தூத்துக்குடி அமுதா நகர், 2ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் கீழசெக்காரக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பையா (60) மற்றும் தூத்துக்குடி, கதிர்வேல்நகரைச் சேர்ந்த செந்தில் விநாயகம் (45) ஆகியோர் சட்டவிரோத விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் வழக்குப்பதிவு செய்து சுப்பையா மற்றும் செந்தில் விநாயகம் ஆகிய இருவரையும் கைது செய்தார்.