தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த இருவர் கைது! - Thoothukudi district crime news

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே மருந்தகத்தில் ரெம்டெசிவிர் குப்பிகளை அதிக விலைக்கு விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

ரெம்டெசிவர் மருந்து விற்பனை
ரெம்டெசிவர் மருந்து

By

Published : May 22, 2021, 9:40 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மே 13ஆம் தேதி கோவில்பட்டி மேட்டு காளியம்மன் கோயில் தெருவிலுள்ள ஒரு மருந்தகத்தில் சட்டவிரோதமாக ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்களான சண்முகம் (27), அவரது சகோதரர் கணேசன் (29) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 46 ரெம்டெசிவிர் குப்பிகளை கைப்பற்றினர்.

இவர்களிடம் விசாரணை செய்ததில், மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் மருந்துகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், சண்முகம், கணேசன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து சண்முகம், அவரது சகோதரர் கணேசனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:பெரு நிறுவனங்களைத் தாக்கும் வைரஸ்!

ABOUT THE AUTHOR

...view details