தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது தூத்துக்குடி ராஜபாண்டி நகர் சந்தனமாரியம்மன் கோயில் அருகே சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் இருவர் வந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (33) மாயக்கண்ணன் (24) என்பது தெரியவந்தது.