தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள போலையர்புரம் பகுதியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் கொண்டாடும் விழாவில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விழாவிற்கு தலைமை வகித்தார். இந்த நிகழ்வின் போது, சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த கவிதன் - செல்வசுயம்பு தம்பதியரின் இரட்டை மகள்கள், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்திருந்தனர்.
அதில், “எனது தந்தை கவிதன், சாத்தான்குளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது தாய் செல்வசுயம்பு திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2009-ஆம் ஆண்டு மாநில சீனியாரிட்டி அடிப்படையில், திருப்பூரில் ஆசிரியராக வேலை கிடைத்தது. இந்த நிலையில், அவர் பணிக்கு சேர்ந்த நாளிலிருந்து தற்போது வரை 14 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படிங்க:மனித - வனவிலங்கு மோதல் உயிரிழப்புக்கான நிவாரணத் தொகை ரூ.10 லட்சமாக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு!