இந்தியா முழுவதும் நேற்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஈத்கா திடலில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஜாமியா பள்ளிவாசல், இமாம் அப்துல் அலிம் தலைமையில் இமாம் ஷேக் உதுமான் ஆலிம் தொழுகை நடத்தினார். இந்தத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.
'தமிழ்நாட்டில் மழை வேண்டி பிரார்த்தனை செய்தோம்' - அரசு காஜி முஜிபுர் ரஹ்மான் - Ramzan special prayer in tuticorin
தூத்துக்குடி: உலக மக்கள் அமைதிக்கும், தமிழ்நாட்டில் மழை வேண்டியும் பிரார்த்தனை செய்ததாக, அரசு காஜி முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
!['தமிழ்நாட்டில் மழை வேண்டி பிரார்த்தனை செய்தோம்' - அரசு காஜி முஜிபுர் ரஹ்மான்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3481843-thumbnail-3x2-kk.jpg)
தமிழ்நாட்டில் மழை வர வேண்டும் என பிரார்தனை செய்தோம் - அரசு காஜி முஜிபுர் ரஹ்மான்
அரசு காஜி முஜிபுர் ரஹ்மான் செய்தியாளர் சந்திப்பு
இதில், அரசு காஜி முஜிபுர் ரஹ்மான் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர், "தமிழ்நாட்டில் நிலவிவரும் வறட்சி தீர மழை பெய்யவும், உலக மக்கள் அமைதிக்கும், உலக மக்கள் நலமுடன் வாழவும், நாடு வளம்பெறவும் வேண்டி பிரார்த்தனை செய்தோம்" என்று தெரிவித்தார்.
Last Updated : Jun 6, 2019, 1:35 PM IST