தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏப்ரல் 18ஆம் தேதி மோடிக்கு கெட் அவுட் சொல்வோம்: உதயநிதி ஸ்டாலின் - Election 2019

தூத்துக்குடி: நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மோடிக்கு கெட் அவுட் சொல்வோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

By

Published : Apr 4, 2019, 7:16 PM IST

தூத்துக்குடி மக்களவைத்தொகுதி திமுக வேட்பாளர்கனிமொழியை ஆதரித்து, கோவில்பட்டியில் முரசொலி நாளிதழ் நிர்வாக இயக்குநரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

"ஏப்ரல் 18ஆம் தேதி மோடிக்கு கெட் அவுட் சொல்வோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் 44 நாடுகளுக்கு 55 முறை மோடி சென்றுள்ளார். இதற்கான விமான செலவு ரூ.5 ஆயிரம் கோடி. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்களே நடத்திய போராட்டத்தை அடக்குவதற்கு, தமிழக அரசு 13 பேரை பட்டப்பகலில் சுட்டு கொன்றது. இதற்கு இரங்கல் அறிக்கை கூட தெரிவிக்காதவர்தான் நமது பிரதமர்.

மருத்துவர் அன்புமணி ராமதாஸ், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என கூறினார். ஆனால், தற்போது தடுமாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணியாகி விட்டார்.அதே போல், ஜெயலலிதா வழியில் ஆட்சி என கூறுகின்றனர். ஆனால் அவர் எப்படி மரணமடைந்தார் என்று கூறினார்களா? இதுவரை யாரிடமாவது உண்மையை சொல்லியுள்ளனரா?

இப்போது துணை முதல்வராக உள்ள ஓ.பி.எஸ், அப்போது முதல்வர் பதவியை இழந்தவுடன், ஜெயலலிதா சமாதிக்கு சென்று தர்மயுத்தம் நடத்தினார். அப்போது ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்றார். இப்போது துணை முதல்வர் பதவி கொடுத்தவுடன் வாயே திறக்கவில்லை. இப்படிப்பட்ட முதல்வர், துணை முதல்வர் நமக்கு தேவையா?. இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

தூத்துக்குடி மக்களவைத்தொகுதி வேட்பாளர் கனிமொழிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால், வீட்டுக்கு அனுப்ப போவது மோடியை மட்டுமல்ல, கூட இரண்டு அடிமைகளான ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரையும் சேர்த்துதான்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details