ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் எம்.சி. சண்முகையா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி நேற்று பரப்புரை மேற்கொண்டார்.
ஓட்டப்பிடாரம் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கனிமொழி பரப்புரை! - dmk
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் தொகுதியின் திமுக வேட்பாளர் சண்முகையாவுக்கு ஆதரவாக கனிமொழி பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “மக்களுக்காக உழைக்கக் கூடிய ஒரு நல்ல வேட்பாளரை உங்கள் முன் நிறுத்தியுள்ளோம். இந்த தொகுதியில் நிலவிவரும் தண்ணீர் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், கல்வி பிரச்னை உள்ளிட்ட அனைத்திற்கும் இவரால் தீர்வு அளிக்க முடியும்.
தமிழ்நாட்டிற்கு ஒரு நன்மையையும் செய்திடாத மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என அதிமுக வாக்கு கேட்கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் இங்குள்ள தொழில்களை எல்லாம் அவர்கள் அழித்துவிட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டு காலங்களில் ஒரு குளம்கூட தூர்வாரப்படவில்லை. இங்கே, தூத்துக்குடியில் உள்ள அனைத்து குளங்களும் மேடு தட்டாக மாறி கிடக்கின்றன. இது அனைத்தையும் ஒழுங்குப்படுத்த திமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்” என்றார்.