ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் மங்களகிரி விலக்கு பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் நேரு தலைமை தாங்கினார். இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், நடைபெற உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சண்முகையாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதென உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தொடர்ந்து மதியம் 1.45 மணி அளவில் திமுக வேட்பாளர் சண்முகையா மனு தாக்கல் செய்வதற்காக ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், மதிமுக மாவட்டச் செயலாளர் புதுக்கோட்டை செல்வம், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஏ.பி.வி.சி. சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.