தமிழ்நாடு முழுவதும் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், முதல்முறை வாக்களிப்பவர்கள் முதல் முதியவர்கள் வரையிலும், சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
திருமணம் முடிந்த கையுடன் வாக்களித்த தம்பதி! - மக்களவைத் தேர்தல்
தூத்துக்குடி: கோவில்பட்டியில் திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதியினர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
திருமணம் முடிந்த கையுடன் வாக்களித்த தம்பதி!
இந்நிலையில், தூத்துக்குடி அடுத்த கோவில்பட்டியைச் சேர்ந்த நந்தினி முனிஸ்வர பாரதி ஆகியோருக்கு அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, புதுமணத் தம்பதியினர் மணக்கோலத்தில் சென்று தங்களுக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
இது குறித்து முனீஸ்வர பாரதி கூறுகையில், வாக்களிப்பது என்பது ஜனநாயகக் கடமை. இதனை நான் மணக்கோலத்தில் வந்த ஜனநாயக கடமையை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்