தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் சிறுமி கொலை: நிவாரணம் வழங்கிய மாவட்ட ஆட்சியர் - சாத்தான்குளம் சிறுமி கொலைக்கு மாவட்ட ஆட்சியர் நிவாரணம்

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ரூ. 4 லட்சத்து 12 ஆயிரத்து 500க்கான காசோலை சிறுமியின் தாயார் உச்சிமாகாளியிடம் வழங்கினார்.

tutucorin collector compensation for girl murder in sathankulam
tutucorin collector compensation for girl murder in sathankulam

By

Published : Jul 17, 2020, 9:02 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கல்விளை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி உச்சிமாகாளி. உச்சிமாகாளி கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்துவருகிறார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை, ஏழு வயதில் பெண் குழந்தை இருந்தது.

கடந்த 15ஆம் தேதி காலை, பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்கச் சென்ற சிறுமியை, அந்த வீட்டிலிருந்த இளைஞர் முத்தீஸ்வரன் கழுத்தை நெறித்து கொலை செய்து ட்ரம்முக்குள் போட்டு பாலத்துக்கு அடியில் வீசியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்த சாத்தான்குளம் காவல்துறையினர் முத்தீஸ்வரன், நந்தீஸ்வரன் ஆகியோரை கைதுசெய்தனர்.

சிறுமியின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டது. இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், சிறுமியின் குடும்பத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், சிறுமியின் தாயாருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்த உறவினர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிவாரணம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

இதையடுத்து இன்று (ஜூலை 17) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ 8.25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதில் முதற்கட்டமாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலை, வீட்டுமனை பட்டாவை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் உச்சிமாகாளியிடம் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சிறுமி கஞ்சா போதை ஆசாமிகளால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது குடும்பத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டுத் தொகையும், தற்போது குடியிருந்து வரும் வீட்டிற்கு வீட்டுமனை பட்டாவும், அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி சிறுமியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தை முன்னெடுத்தோம்.

அதன் பயனாக சிறுமியின் குடும்பத்திற்கு 8.25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டுமனைப் பட்டாவையும் மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு சிறுமியின் உடலை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க... நெல்லையில் 7 வயது சிறுமி கொலை: உடலை வாங்க விசிக மறுப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details