தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடிக்கு வருபவர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தபடுவர் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி - Tuticorin will be subjected to severe scrutiny

தூத்துக்குடி: வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தான் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடிக்கு வருபவர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தபடுவர் -மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி!
தூத்துக்குடிக்கு வருபவர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தபடுவர் -மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி!

By

Published : May 2, 2020, 5:21 PM IST

வெளி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி வருபவர்களுக்கு கரோனா சோதனை நடத்த மாவட்ட எல்லை பகுதிகளான எட்டயபுரம், கோவில்பட்டி பகுதிகளில் சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்ட ஐந்து தாலுகாக்கலில் 10 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், செய்துங்கநல்லூர், காயல்பட்டினம், கேம்ப்லாபாத் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் 28 நாட்கள் கண்காணிப்பு நிலை முடிவடைந்ததால் அப்பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர் சந்திப்பு

மேலும், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து அனுமதியின்றி வருபவர்களை கண்காணிப்பதற்காக மாவட்ட எல்கைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்திலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் மாவட்ட எல்லையில் சோதனை மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தவும் கோவில்பட்டி, எட்டயபுரம், வகளாத்திக்குளம், வேம்பார் உள்ளிட்ட பகுதிகளிலும், கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தங்க வைக்கப்படுவர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...முதியோர் இல்லத்தில் மூதாட்டிக்கு கரோனா தொற்று

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details