தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடுதல் மின் உற்பத்தி - தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி: காற்றாலை, சூரிய ஒளி மூலம் தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகமாகி வரும்ட நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நான்கு யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Thermal Power Station
Thermal Power Station

By

Published : Jun 1, 2021, 5:05 PM IST

தமிழ்நாடு முழுவதும் காற்றாலை, சோலார் மின் திட்டம் மூலம் தற்போது அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் தேவைக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தற்போது 4 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்கள் மூலம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நான்கு யூனிட்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details