தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை - தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை! - தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி

தூத்துக்குடி: நாட்டு வெடிகுண்டு தயாரித்தாலும், வைத்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை பாயும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை - எஸ்பி எச்ச்சரிக்கை!
நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை - எஸ்பி எச்ச்சரிக்கை!

By

Published : Aug 21, 2020, 11:09 AM IST

Updated : Aug 21, 2020, 1:07 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் தென்காசி - தூத்துக்குடி மாவட்ட எல்லையில் காவல் துறை புதிய சோதனைச்சாவடி கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நடைபெற்றது. இந்தச் சோதனைச்சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், “சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துவருகிறோம். கத்தி வைத்திருந்தால்கூட அவர்களைப் பிடித்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில்தான் கைதுசெய்கிறோம். நாட்டு வெடிகுண்டை அனுமதிக்க முடியாது. அது சட்ட விரோதம்.

நாட்டு வெடிகுண்டு தயாரித்தாலும், வைத்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

கடந்த ஒரு மாதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள்களை ஒழிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் 23 கஞ்சா வழக்குகள் பதிவுசெய்து 32 பேரை கைது செய்துள்ளனர்.

25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம், கஞ்சாவில் ஒரு பொருளான சாரஸ் என்ற போதைப்பொருள் 25 கிலோ திருச்செந்தூரில் பிடித்துள்ளோம், சாரஸ் உலகச் சந்தையில் அதிக மதிப்பு கொண்டது. இது தொடர்பாக 2 பேரை கைதுசெய்து எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றோம்.

தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்ச் சந்திப்பு

இதுபோன்று குட்கா, புகையிலைப் பொருள்கள் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி பகுதிகளில் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள்கள் விற்பனை செய்வது அல்லது வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், குண்டர் தடுப்புக் காவலில் வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காவலர் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு எதேச்சையாக நடந்தது. தனிப்படை கைதுசெய்ய சென்றபோது மூன்று பேரை கைது செய்துவிட்டனர். ஒருவர் தப்பிச் செல்லும்போது, காவலர் துரத்திச் சென்றார். அப்போதுதான் நாட்டு வெடிகுண்டு வீச்சு நடைபெற்றுள்ளது. இது நடக்கக்கூடாத சம்பவம்" எனத் தெரிவித்தார்.

நாட்டு வெடிகுண்டு பயிற்சியில் ரவுடி துரைமுத்து

இதற்கிடையே குண்டுவெடிப்பில் பலியான குற்றவாளி துரைமுத்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு, அதைப் பயிற்சி எடுப்பது போன்ற காணொலியும் தூத்துக்குடி மாவட்டத்துக்குள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. இதுபோன்ற காணொலிகளை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க...கரோனா காலத்தில் குறைந்த விலையில் உணவளிக்கும் பெண்

Last Updated : Aug 21, 2020, 1:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details