தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா ஆய்வு செய்தார். ஆய்வின் போது வாகனத்தை சிறப்பாக பராமரித்து வரும் வாகன ஓட்டுனர்களுக்கு வெகுமதி வழங்கினார். அதன் பிறகு காவல்துறை அலுவலர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
சிறப்பாக பணியாற்றிய 104 காவலர்களுக்கு பாராட்டு! - police
தூத்துக்குடி : மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில், சிறப்பான பணியாற்றிய 104 காவலர்களுக்கு மாவட்ட காவல் காண்காணிப்பாளர் முரளிரம்பா வெகுமதி வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்து எடுக்கப்பட்ட, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கினார்.
பின்னர், மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் சிப்காட் காவல் நிலையம் ஆய்வாளர் தில்லை நாகராஜன், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் உட்பட 104 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா வெகுமதி வழங்கி பாராட்டினார்.