தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்தூக்குடியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி- மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைப்பு - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி: தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக இதுவரை தூத்துக்குடியில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஸ்கேட்டிங் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தேர்தல் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் நிகழ்சியை தொடங்கி வைத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்!

By

Published : Mar 17, 2019, 12:59 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ஸ்கேட்டிங் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதைத்தொடர்ந்து, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு இடையேயான தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி, வி.வி.பேட் இயந்திரம் செயல்பாடு குறித்த விளக்க நிகழ்ச்சி ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், 'வெளியூரில் வேலைசெய்யும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் படிவம்-6 ஐ பூர்த்தி செய்து, வெளியூரில் தாங்கள் வசிக்கும் இடத்திற்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தால் அவர்களுக்கு அந்த தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியிலேயே வாக்களிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்' என்றார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக இதுவரை 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என்றும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details