தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், "தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பதிப்பிக்குளான ஐந்து பேரும் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. எனவே, அவர்களுடன் தொடர்பிலிருந்த 130 பேரும் கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
தூத்துக்குடியில் ஐவருக்கு கரோனா உறுதி - ஆட்சியர் சந்தீப் நந்தூரி - tuticorin collector press meet
தூத்துக்குடி: மாவட்டத்தில் ஐந்து பேருக்கு கரோனா வைரஸ் உறுதியான நிலையில், அவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
இவர்களின் வீடுகளிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள்பட்ட பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு யாரும் வரக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கரோனா தொற்று அறிகுறியுடன் வந்த 350 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த 2,200 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தபட்டு தினசரி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ. 52 லட்சம் நிதியுதவியாக பெறப்பட்டுள்ளது. தன்னார்வலர்களைக் கொண்டு முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வீட்டுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.