தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000-ஐ தாண்டிய நிலையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கோவில்பட்டி அரசு மருத்துவமனை, தனியார் கல்லூரி விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வார்டுகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கரோனா நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் சிகிச்சை விவரங்கள், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரப்பிரிவு அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.