தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் - வேலை நிறுத்த அறிவிப்பு

தீப்பெட்டி லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்

லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

By

Published : Apr 20, 2021, 12:34 AM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் சீனிவாசன் தலைமையில் இளையரசனேந்தல் அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் 19) நடைபெற்றது. அதில், தீப்பெட்டி லாரி புக்கிங் அசோசியேஷன் சங்க தலைவர் மருது செண்பகராஜ் , செயலாளர் கணேஷ்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பின் சங்க நிர்வாகிகள் கூறியதாவது, ‘’லாரிகளில் தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றி, இறக்க கொடுக்கப்படும். லாரி உரிமையாளர்கள்தான் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலியை வழங்கி வந்தனர். ஒரு லாரியில் லோடு ஏற்ற 7,000த்திலிருந்து, எட்டாயிரம்வரையும், லாரிகளில் இருந்து பண்டல்களை இறக்க மூன்று ஆயிரத்திலிருந்து, நான்கு ஆயிரம் வரையிலும் கூலி கொடுத்து வந்தோம்.

இந்நிலையில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 12ஆம் தேதி முதல் கூலியை 30 சதவீதம் உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனக் கேட்கின்றனர்.

கரோனா வைரஸ் தாக்கத்தினால் முன்பு போல் லோடுகள் இல்லை. மேலும் டோல்கேட் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துவருகிறோம். எனவே, ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து தீப்பெட்டி பண்டல்களை லாரியில் ஏற்றி, இறக்க கொடுக்கப்படும் கூலியை தீப்பெட்டி உற்பத்தியாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி 21ஆம் தேதி முதல் லாரிகளில் தீப்பெட்டி பண்டல்களை ஏற்ற மாட்டோம். மற்ற சரக்குகள் ஏற்றும் பணி வழக்கம்போல் நடைபெறும். தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் எங்கள் கோரிக்கையை ஏற்கும்வரை போராட்டம் தொடரும். இதனால் நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது'' இவ்வாறு அவர் கூறினார்கள்.

இதையும் படிங்க: பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பெண்ணை சீண்டிய மதபோதகர் கைது

ABOUT THE AUTHOR

...view details