தூத்துக்குடி: மகாகவி பாரதியாரின் 101ஆவது நினைவு நாளை முன்னிட்டு பாரதியார் இல்லத்தில் அமைச்சர் கீதா ஜீவன், சட்டப்பேரவை உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மகாகவி பாரதியாரின் நினைவைப்போற்றும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதியின் நினைவு நாளை 'மகாகவி நாள்' என கடைபிடிக்கப்படும் என்று அறிவித்ததைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள எட்டையபுரத்தில் பாரதியாரின் மணிமண்டபத்தில் உள்ள பாரதியின் திருவுருவச்சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
101ஆவது நினைவுநாளை முன்னிட்டு எட்டையபுரத்தில் பாரதியார் சிலைக்கு மரியாதை - பாரதியின் நினைவு நாளை மகாகவி நாள்
மகாகவி பாரதியாரின் 101வது நினைவுநாளை முன்னிட்டு எட்டையபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மரியாதை செலுத்தினார்.
101வது பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் பாரதியார் சிலைக்கு மரியாதை