தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Thoothukudi news: தாமிரபரணி அணையிலிருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வது குறைக்கப்படும் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் - கூட்டுக் குடிநீர் திட்டம்

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைப் பகுதியில் இருந்து 20 எம் ஜி டி திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வது படிப்படியாக குறைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறினார்

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 7:53 PM IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி: வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைகள் முறையாகப் பெய்யாத காரணத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏரல், வாழவல்லான், பேய்குளம், சாத்தான்குளம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

குடிநீர் தட்டுப்பாடு தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அணை, கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்கள் மற்றும் குரங்கணி உள்ளிட்ட தடுப்பணைகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, குடிநீர் வடிகால் வாரியம், வருவாய்த்துறை மற்றும் நீர்வளத் துறையினரோடு ஆலோசனையில் ஈடுபட்டு குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் விரைந்து செய்யும் படி உத்தரவிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”விவசாயத்திற்கும் குடிதண்ணீருக்கும் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் வழங்குவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்செந்தூர், சாத்தான்குளம் உடன்குடி பகுதி மற்றும் ஏரல் வாழவல்லான் பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தட்டுப்பாடு இன்றி தண்ணீர் வழங்குவதற்கான கூட்டுக் குடிநீர் திட்ட உறை கிணறுகளில் எப்போதும் தண்ணீர் இருப்பதை நீர்வளத் துறையினரும் குடிநீர் வடிகால வாரியத் துறையினரும் உறுதிப்படுத்தி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் அணையில் செயல்பட்டு வரும் 20 எம் ஜி டி திட்டத்தில் ஸ்பிக் மற்றும் தெர்மல் பவர் பிளான்ட்டுக்கு தண்ணீர் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

சிப்காட்டில் செயல்படும் மற்ற கம்பெனிகளுக்கு மாநகராட்சி பகுதியில் செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் அத்திட்டம் செயல்படுத்தப்படும் போது ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பது படிப்படியாக குறைக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: "வறட்சியால் கருகிய பனை மரங்களை மீட்க நடவடிக்கை" - எம்பி கனிமொழி உறுதி!

ABOUT THE AUTHOR

...view details