தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியவகை கடல்வாழ் உயிரினங்களை கண்டறிய உதவும் பயிற்சி முகாம்!

தூத்துக்குடி : மன்னார் வளைகுடாவில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை கண்டறிதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி

By

Published : Jul 30, 2019, 5:43 PM IST

இந்த பயிற்சி முகாமில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை இயக்குனரும் திருநெல்வேலி, விருதுநகர் மண்டல வன அலுவலருமான தின்கர் குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதில் கடல் வாழ் அரிய வகை உயிரினங்களான கடற்பசு, கடற்குதிரை, கடற்புற்கள், பவளப்பாறைகள், கடல்வாழ் அரியவகை உயிரினங்கள் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி

மேலும் பயிற்சி முகாமில் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாத்தல் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வேட்டையாடப்படுதலை தடுத்தல், இனங்கள் கண்டறிதல், பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்கள் வேட்டையாடப்பட்டால் வழங்கப்படும் தண்டனை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

அரியவகை கடல்வாழ் உயிரினங்களை கண்டறிய உதவும் பயிற்சி முகாம்

பின்னர் அலுவலர் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கடற்கரை மாவட்டங்கள் வழியாக அரிய வகை கடல் அட்டை, கடற்குதிரை உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டுவருகிறது. இதில் பிடிபடும் கடல் வாழ் உயிரினங்களை இனம் கண்டறிவது என்பது பலருக்கு சிரமமாக உள்ளது. அதற்கு, இன்று நடைபெறும் பயிற்சி முகாம் மிக உதவிகரமாக இருக்கும்.

மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பாறைகள் அழிந்து வருவதை தடுப்பதற்காக பல்வேறு ஆய்வுகளை மத்திய கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்டுவருகிறது. இதைத் தவிர பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பல்லுயிரின பெருக்க நடவடிக்கைகளையும், தனியார் கடல் ஆராய்ச்சி நிலையம் மூலம் செயற்கை பவளபாறைகள் அமைக்கப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்' என்றார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details