தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் 16 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்! - CCTV Monitoring centre inaugurated in Toothukudi

தூத்துக்குடி: பழைய பேருந்து நிலைய பகுதியைக் கண்காணிக்க 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று தொடங்கிவைத்தார்.

cctv
cctv

By

Published : Sep 30, 2020, 6:24 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்துவரும் குற்றச் சம்பவங்களை குறைக்கும் நோக்கமாக மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, மாவட்டத்தில் கோவில்பட்டி, ஆழ்வார் திருநகர், திருச்செந்தூர் உள்பட பல்வேறு இடங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மையம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தைச் சுற்றி முக்கிய இடங்களில் 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, இன்று செயல்பாட்டுக்கு வந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு கண்காணிப்பு மையத்தை தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “காவல் துறையின் மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்றுவருகிறது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5,500 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடியில் மெயின் ரோட்டை தவிர குடியிருப்புப் பகுதிகளில் பொருத்த முன்னுரிமை அடிப்படையில் பணி செய்துவருகிறோம். ஒவ்வொரு பகுதியின் தேவையை கருத்தில்கொண்டு கேமராக்கள் அமைக்கப்படுகிறது.

அடுத்தக்கட்டமாக திருவைகுண்டம், முறப்பநாடு, செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றச் சம்பவம் அதிகம் நடைபெறும் இடங்கள், குற்றம் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details