இயேசு பிரான் மக்களைப் பாவங்களிலிருந்து ரட்சிப்பதற்காகவும் நல்வழிப்படுத்தி ஏழைகளுக்கு உதவுவதற்காகவும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக தவக்கால பணியில் ஈடுபட்டார். 40 நாட்கள் நடைபெறும் இந்தத் தவக்கால வழிபாடு பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கியது. கடைசி வாரம் புனித வாரமாகக் கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு வழிபாடு - toothukudi church
தூத்துக்குடி: உலக புகழ்பெற்ற 459ஆண்டுகள் பழமைவாய்ந்த பனிமய மாதா பேராலயத்தில் இயேசு பிரானின் ஈஸ்டர் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
![ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு வழிபாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3064004-thumbnail-3x2-easter.jpg)
உலக ரட்சகரான இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாகக் கிறிஸ்தவ மக்களால் அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் உயிர்தெழுந்த மூன்றாம் நாளை ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்கள் கொண்டாடுவர்.
இந்நிகழ்வின் அங்கமாகத் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயத்தில் பங்குத் தந்தை லெரின் டிரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் இயேசு பிரான் உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நடத்திக் காட்டப்பட்டது. அப்போது கிறிஸ்துவ மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இயேசு பிறப்பை வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர் சிறப்பித்தனர்.