தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அனைத்து கிராமங்களிலும் கழிவறை '- தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்

அனைத்து கிராமங்களிலும் கழிவறை அமைக்க ஊராட்சி மன்ற தலைவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி ஆட்சியரின் பேச்சு
தூத்துக்குடி ஆட்சியரின் பேச்சு

By

Published : Dec 15, 2022, 6:24 PM IST

தூத்துக்குடி ஆட்சியரின் பேச்சு

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட உதவி தொகைகள் 13 நபர்களுக்கும், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம் என என மொத்தம் 72 பயனாளிகளுக்கு 2,32,585 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் ’சுத்தமும் சுகாதாரமும்' எனும் கதையை கூறி கழிப்பறையில் மலம் கழிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் பெண்கள் வெளியே சென்று மலம் கழித்தால் ரத்த சோர்வு வரக்கூடும் என அறிவுறுத்தினார். இதனால் அனைத்து கிராமங்களிலும் கழிவறை அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்களை வலியுறுத்தினார்.

தொடர்ந்து, பசுவந்தனை பஜாரில் அமைக்கப்பட்டிருந்த புதிய கழிப்பிடம் மற்றும் வடக்கு கைலாசபுரம் கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவது குறித்து, ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற குகேஷுக்கு பிரமாண்ட பாராட்டு விழா!

ABOUT THE AUTHOR

...view details