தூத்துக்குடி:தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட 3,359 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதனையடுத்து, இந்த தேர்வை எழுதுவதற்காக 2 லட்சத்து 84 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட மையங்களில் அமைக்கப்பட்டு இன்று (டிச.10) தேர்வு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் 7,077 ஆண்களும், 1,991 பெண்களும் என மொத்தம் 9,068 பேர் இந்த தேர்வை எழுதினர். முன்னதாக அதிகாலை முதலே தேர்வு மையங்களில் குவிந்த தேர்வாளர்களை, கடும் சோதனைக்குப் பின்பு தேர்வு எழுதுபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.