என்எல்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து என்டிபிஎல் சார்பில் 1,000 மெகாவாட் மின்திறன் கொண்ட அனல்மின் நிலையத்தை செயல்படுத்தி வந்தன.
இங்கு தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 2 யூனிட்கள் உள்ளன.இந்நிலையத்தின் 2ஆவது யூனிட்டில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்படாததால் கடந்த ஆறு மாத காலமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்த அனல்மின் நிலையம் மின் உற்பத்தி செய்து வருகிறது.
இந்நிலையில் இதன் 2ஆவது யூனிட்டில் கடந்த 16.01.2019-இல் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுது ஏற்பட்டு 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை பழுது சரி செய்யப்படவில்லை. இதனால் கடந்த 6 மாதங்களாக 2ஆவது யூனிட் செயல்படவில்லை.
இதுகுறித்து என்டிபிஎல் அலுவலகர்களிடம் கேட்டபோது, 2ஆவது யூனிட்டில் மின் உற்பத்தி செய்யப்படும் டர்பைன் பகுதியில் பழுது ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.