தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓட்டப்பிடாரத்தில் திண்ணை பிரசாரத்தைத் தொடங்கினார் ஸ்டாலின்! - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி: திமுக தலைவர் ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திண்ணை பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

தின்னை பிரச்சாரத்தை தொடங்கிய திமுக தலைவர் ஸ்டாலின் !

By

Published : May 14, 2019, 5:31 PM IST

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரப் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். ஓட்டபிடாரத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட ராமச்சந்திரபுரம், ஜக்கம்மாள்புரம், காமராஜர் நகர், கூட்டாம்புளி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்த அவர், திடீரென திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை!

அப்போது பொதுமக்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடம், குடிநீர் வசதி, சாலை வசதி, பேருந்து வசதி, உள்ளிட்டவை எங்களுக்கு 40 ஆண்டுகளாக சரிவர கிடைக்காமல் இருப்பதாகவும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர், மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் பிறந்தநாளையொட்டி, அங்கு அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details