தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் கலங்கரை பகுதியில் உள்ள எஸ்.டி.ஆர். தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வெண்கல சிலை திறப்பு விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கலந்துகொண்டு வெண்கல சிலையினை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தல் என்பது ஏகமாக உறுதியாகியுள்ளது.
'தமாகா-வுடன் ஒத்த கருத்துடையவரே பிரதமராவார்' -ஜி.கே.வாசன் - PRESS
தூத்துக்குடி: தேர்தல் சமயத்தில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணியோடுதான் தேர்தலை சந்திக்கும் அதற்கு த.மா.க. ஒன்றும் விதிவிலக்கல்ல. தேர்தலில் த.மா.கா.வுடன் ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சி வேட்பாளர்தான் பிரதமராக இருப்பார் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
ஆனால் முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை. நாளுக்கு நாள் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் வித்தியாசப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எனவே, தேர்தல் சமயத்தில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணியோடுதான் தேர்தலை சந்திக்கும் அதற்கு த.மா.க.வும் விதிவிலக்கல்ல என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் நெருங்குகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒத்த கருத்துள்ள கட்சியினருடன்தான் கூட்டணி அமைப்போம். தேர்தல் கூட்டணி என்பது 100% வெளிப்படையாக நடப்பது கிடையாது. தேர்தலில் த.மா.க.வுடன் ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சி வேட்பாளர்தாக் பிரதமராக இருப்பார். பட்ஜெட்டை பொறுத்தவரையில் விவசாயிகளுக்கு இன்னும் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து அதை அரசு பூர்த்தி செய்ய வேண்டும். பல துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறினார்.