தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Tamilnadu Health minister interview

தமிழ்நாட்டில் ஆறு மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharatவிமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை - அமைச்சர் மா சுப்ரமணியன்
Etv Bharatவிமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை - அமைச்சர் மா சுப்ரமணியன்

By

Published : Dec 23, 2022, 1:23 PM IST

Updated : Dec 23, 2022, 3:57 PM IST

மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தூத்துக்குடி: கன்னியாகுமரியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வந்தடைந்தார்.

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், ‘உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் அதைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான மருந்து கையிருப்பு, படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவற்றை முதலமைச்சர் ஆராய்ந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் அதிகரித்துக் கொண்டு இருக்கிற காரணத்தினால் அந்த நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஏதாவது அறிகுறி தென்பட்டால் அவர்களுக்குப் பரிசோதனை செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

குறிப்பாக ஜப்பான், சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களை ரேண்டமாக 2% ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளோடு வந்தால் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. குறிப்பாக, கோவை, மதுரை திருச்சி, சென்னை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் இன்று முதல் பரிசோதனை அமைக்கப்படும்.

மருந்து இருப்பு உள்ளது:மேலும், ஆறு மாதத்திற்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது. படுக்கைகளை பொருத்தவரை கொரோனாவிற்கு என்று ஏற்கனவே ஏற்பாடு செய்த படுக்கைகள் அனைத்தும் கையிருப்பில் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாது, கடந்து அலையின்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கைகளை கூடுதலாக, தமிழ்நாட்டில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். அதிதீவிர சிகிச்சைப் பிரிவு காணப்படுக்கைகள், தமிழ்நாடு முழுவதிலும் திறந்து வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கு என்றும் கூட பிரத்தியேகமாக படுக்கைகள் உள்ளது.

அதோடு மட்டுமில்லாமல், ஆக்சிஜனை கையிருப்பில் வைத்துக் கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பாக, ஜெனரேட்டர், சிலிண்டர் போன்ற அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் இருக்கிறது. எனவே மக்கள் பெரிய அளவில் அச்சப்பட வேண்டியதில்லை, தடுப்பூசி போடும் பணி முதல் தவணை 96 சதவீகிதம், இரண்டாவது தவணை 92 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், எனவே ஒட்டு மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் இருக்கிற மக்களுக்கு 90 சதவீதத்துக்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் குறந்த அளவு பாதிப்பு: இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக பெரிய அளவில் பாதிப்பு இல்லை, மேலும், ஆங்காங்கே ஒவ்வொரு நாளும் 40, 50 பேர் மரணம் அடைந்து கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 6 மாத காலமாக இழப்பு ஏதும் இல்லாத நிலை என்பது தொடர்ச்சியாக நிலைத்து கொண்டிருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் சிங்கிள் டிஜிட் என்கின்ற வகையில் 6, 7, 8 என்கிற வகையிலே தான் பாதிப்பும் வந்துகொண்டிருக்கிறது. மேலும், நேற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 6 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது, எனவே மிக பாதுகாப்பான நிலையில் தமிழ்நாடு உள்ளது.

மேலும் மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களில் பாதுகாப்புக்காக முகக் கவசங்கள் அணிவதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மாதிரியான விதிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் நல்லது. கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என கூறினார்.

இதையும் படிங்க:துரை வைகோ அரசியலில் ஒரு கத்துக்குட்டி - கடம்பூர் ராஜூ பேட்டி

Last Updated : Dec 23, 2022, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details