தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விவசாயிகளை கொச்சைப்படுத்துவதை ஸ்டாலின் நிறுத்தவேண்டும்' - முதலமைச்சர் - விவசாயிகளை ரவுடிகளுடன் ஒப்பிட்ட ஸ்டாலின்

விவசாயிகளை ரவுடிகளுடன் ஒப்பிட்டு பேசுவதை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்தவேண்டும் என தூத்துக்குடியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

tn cm edapadi palanisamy campaign at tuticorin
tn cm edapadi palanisamy campaign at tuticorin

By

Published : Jan 3, 2021, 12:51 PM IST

தூத்துக்குடி: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வில்லிசேரி கிராமத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பருத்தி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

அதில், விவசாயிகளையும், ரவுடியையும் ஒப்பிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது வேதனை அளிக்கிறது. வயலில் வேலை செய்பவர்களுக்கு தான் விவசாயிகளின் வேதனை தெரியும். ரவுடியாக ஸ்டாலின் இருப்பதால் ரவுடி என அவர் பேசுகிறார். விவசயிகளை கொச்சைப்படுத்தும் விதமாக ஸ்டாலின் பேசுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என விவசாயியாக, விவசாயிகளின் சார்பில் அன்போடு கேட்டுகொள்கிறேன்.

விவசாயிகளிடம் இருந்து பொருள்களை கொள்முதல் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பும் திட்டத்தை எதிர்காலத்தில் செய்ய இருக்கிறோம். ஏழை மக்களை காக்க புதிய திட்டங்களை இந்த அரசு கொண்டு வரும் என்றார்.

ல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர்

இந்தக் கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ராமநாதபுரம் செழிப்பான மாவட்டமாக மாறும் - முதலமைச்சர் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details