தூத்துக்குடி:அரபிக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இந்த அதி கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள்ளும், சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது.
இதனால், மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து பல்வேறு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, சீரமைக்கப்பட்டன. இந்த நிலையில், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (டிச.26) நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், செல்போன் டவர்கள் சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இதெல்லாம் வழங்கப்பட்டுள்ளதா? ஸ்ரீ வைகுண்டத்தில் ரயில் தண்டவாளங்கள் 8 கி.மீ தூரம் தான் சேதமடைந்துள்ளது. அதை மத்திய அரசு ஏன் இன்னும் சீரமைக்கவில்லை.