தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க தேரை பக்தர்கள் கட்டணம் செலுத்தி கோயில் கிரி பிரகாரம் சுற்றி இழுத்து சென்று வழிபடுவது வழக்கம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாத திருவெம்பாவை உற்சவம் இன்று (டிச. 28) தொடங்கி ஜனவரி 6 ஆம் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று முதல் தங்க தேர் புறப்பாடு 10 நாட்கள் நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.