தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி விழா தொடக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Etv Bharat சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி விழா தொடக்கம்
Etv Bharat சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி விழா தொடக்கம்

By

Published : Feb 25, 2023, 4:42 PM IST

Updated : Feb 25, 2023, 6:23 PM IST

சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி விழா தொடக்கம்

தூத்துக்குடி:உலகப்புகழ் பெற்றதும் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடானதுமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா இன்று (பிப்.25) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூபத்தி பாரதனையும் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கோயில் உள் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடி மரத்தில் அதிகாலை 5:20 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடிமரத்திற்கு பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பல வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாரதனை நடந்தது.

12 நாட்கள் வெறும் விமர்சையாக நடைபெறும் இந்த திருவிழாவில், திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி கொடுக்கின்றனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 7ஆம் திருநாள் சிவப்புச் சாத்தியும், 8ஆம் திருநாள் பச்சை சாத்தி சப்பரத்திலும் சுவாமி சண்முகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

சிகர நிகழ்ச்சியான 10ஆம் திருநாள் மார்ச் 6ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. கொடியேற்றத்தின்போது செய்தியாளர்கள் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது வழக்கம்.

தற்போது செல்போனில் புகைப்படம் வீடியோ எடுக்க தடை இருப்பதை காரணம் காட்டி கோயில் நிர்வாகம் செய்தியாளர்களை செல்போனில் வீடியோ எடுக்க விடாமல் தடுத்தனர். ஆனால் கொடியேற்றம், தீபாரதனை ஆகிய நிகழ்ச்சிகளை பார்வையாளராக வந்திருந்த பக்தர்கள் சிலர் செல்போனில் படம் பிடித்தனர். இதனை கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

இதையும் படிங்க:வீடியோ: திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் மாசி பெருவிழா தொடங்கியது

Last Updated : Feb 25, 2023, 6:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details