தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூர் முருகன் கோயில் காணிக்கை விபரம்! - திருச்செந்தூர் கோவில் உண்டியல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிப்ரவரி மாதம் உண்டியல் வருமானம் ரூ2.28 கோடி கிடைத்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிப்ரவரி மாத வருமானம் ரூ 2.28 கோடி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிப்ரவரி மாத வருமானம் ரூ 2.28 கோடி

By

Published : Feb 10, 2023, 2:22 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதத்திற்கு இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் இம்மாதத்திற்கான முதல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள காவடி மண்டபத்தில் நடந்தது.

கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர்(பொறுப்பு) கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டன. சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில், 2 கோடியே 28 லட்சத்து 75 ஆயிரத்து 665 ரூபாய் ரொக்கம், 1,690 கிராம் தங்கம், 27,500 கிராம் வெள்ளி மற்றும் 405 வெளிநாட்டு கரண்சிகளை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தற்போதும் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படுகிறது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்: வெறிச்சோடிய துறைமுகம்

ABOUT THE AUTHOR

...view details