தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா கடந்த 25ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று (பிப்.26) அதிகாலை 4:00 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
மாசி திருவிழா 2ஆம் நாள்: களைகட்டிய திருச்செந்தூர் - முருகன்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா 2ஆம் நாள் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருச்செந்தூர்
பின்னர் இரவு மண்டகப்படி மண்டபத்தில் வைத்து சுவாமி குமர விடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமி குமர விடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்மன் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து சிவன் கோயில் சேர்ந்தனர்.
இதையும் படிங்க: ஆழ்துளை கிணற்றில் கிடைத்த பழங்கால அம்மன் சிலை!