தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகளையில் அகழாய்வுப் பணிக்கு தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணி மும்முரம்

சிவகளையில் அகழாய்வுப் பணிகள் நடந்த இடம் மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் பார்வையிட்டார்.

சிவகளை
சிவகளை

By

Published : Oct 6, 2020, 7:24 PM IST

தூத்துக்குடி:சிவகளையில் முதல்கட்டமாக கடந்த மே 25ஆம் தேதி அகழாய்வுப் பணி தொடங்கி செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த அகழாய்வுப் பணியில் 34 முதுமக்கள் தாழிகளும், தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகளும், நெல்மணிகள், அரிசி, மனிதனின் எலும்புக் கூடுகள் என ஏராளமான பழங்கால பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தற்போது பொருள்களை ஆவணப்படுத்தும் பணிகளும், தொல்லியல் கள ஆய்வுக்கு தோண்டப்பட்ட 40 குழிகளை மூடும் பணிகளும் நடந்துவருகின்றன.

இந்நிலையில், சிவகளையில் அகழாய்வுப் பணிகள் நடந்த இடத்தை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் பார்வையிட்டார். அவருடன் சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் கலோன்சிங் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

அகழாய்வுப் பணிகளை பார்வையிடும் அலுவலர்கள்

தொடர்ந்து, சிவகளையில் அகழாய்வுப் பணிகள் நடந்த இடம், கண்டெடுக்கப்பட்ட பொருள்களையும் கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் பார்வையிட்டார். அவருக்கு சிவகளை தொல்லியல் கள அலுவலர்கள் பிரபாகரன், தங்கதுரை ஆகியோர் விளக்கமளித்தனர்.

இதையும் படிங்க:கீழடியில் நடைபெற்ற 6வது கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு

ABOUT THE AUTHOR

...view details