தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமான நிலையப் பணிகள் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் - கனிமொழி

தூத்துக்குடி விமான நிலையப் பணிகளை எதிர்காலத் தேவைக்குத் தகுந்தவாறு இப்போதே திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

thuthookudi-mp-kanimozhi-meeting
thuthookudi-mp-kanimozhi-meeting

By

Published : Jul 14, 2021, 10:20 PM IST

தூத்துக்குடி: ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விமான நிலைய முன்னேற்றக்குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது.

இதையடுத்து இக்கூட்டத்தில் பேசிய கனிமொழி, "இரவு விமான சேவைக்காக நடவடிக்கை மேற்கொள்ளுதல், விமான ஓடுபாதையின் நீளத்தை விரிவுபடுத்துதல் தொடர்பான பணிகளை விரைவாக மேற்கொள்ளுதல், மேலும் சரக்கு விமானங்களை வரச் செய்வது, விமான சேவைகளை அதிகப்படுத்துவது, எதிர்காலத் தேவையை அடிப்படையாக வைத்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தூத்துக்குடி விமான நிலையத்தை சிறந்த விமான நிலையமாக மாற்றிடும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்த தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து வழங்கும். விமான நிலைய பணிகளை எதிர்காலத் தேவைக்குத் தகுந்தவாறு இப்போதே திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மூன்றாம் அலை- டெல்டா அறிகுறிகள் என்னென்ன?

ABOUT THE AUTHOR

...view details