தூத்துக்குடியில் மக்களவைத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் பட்டம் விடும் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி பட்டம் பறக்கவிட்டு தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. இந்தத் தொகுதியில் 37 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கூடுதல் வாக்கு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
தற்போது இரண்டாவது கட்டமாக வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பதிவு செய்தல் உள்ளிட்ட வேலைகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் 84 குழுவாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரையில் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக 105 வழக்குகள் பதியப்பட்டும், ரூ.1 கோடியே 30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளது. மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 236 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன' எனக் கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி