தூத்துக்குடி:திருச்செந்தூர் அருகே கரம்பவிளை சந்தனமாரியம்மன் கோயிலில், கொடைத் திருவிழாவை ஒட்டி, முளைப்பாரி ஊர்வலம் கடந்த 10ஆம் தேதி நடந்தது. இதில் இரு தரப்பினிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் சமாதானமாக சென்றனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 13) இரு தரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் கரம்பவிளையைச் சேர்ந்த மணிகண்டன் (20) காயம் அடைந்தார். மேலும் பாதுகாப்பு பணிக்குச்சென்ற ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன், திருச்செந்தூர் மகளிர் காவல் நிலைய உதவியாளர் மேரி மற்றும் சாத்தான்குளம் டிஎஸ்பி அருண், பாதுகாவலர் பால்பாண்டி (27) ஆகியோர் காயம் அடைந்தனர்.